நேசித்தல்: ஆரம்ப அத்தியாயம் முதல் இறுதி அத்தியாயம் வரை
ஆரம்ப அத்தியாயம் 01 கார்காலம் ஒன்றில் வீடு வந்த மின்மினிப்பூச்சி ஒன்றை நீங்க மனமின்றி உள்ளங்கையில் பொத்திக்கொள்ளும் ஓர் குழந்தையைப் போல் உன்னைப் பற்றிக்கொள்கிறேன். அன்பே , நிரந்தரமில்லா இந் நிகழ்நிலைக் காலத்தில் நகர்ந்துகொண்டிருக்கையில் யாவுமே நிச்சயமற்றவை. எனினும் நான் ஏன் உன்னை நேசிக்கிறேன் ? 02 ஓர் வெள்ளைநிறப் பட்டாம்பூச்சி என் கைகளில் வந்தமர்ந்த நாள் ஒன்றில் முதன்முதலாக நீ என்னை முத்தமிட்டாய். அப்போது வடநிலத்து பைன் மரக் காடுகளில் இலையுதிர் காலம் தொடங்கிக் கொண்டிருந்தது. அன்பே , ஓர் இலை உதிர்கையில் எங்கோ ஓர் பூ பூக்கத்தான் செய்கிறது. ( வெற்றிடம்) இறுதி அத்தியாயம் 01 கொலை செய்யப்பட்ட நம்பிக்கை ஒன்று வெற்று உடலமாய் நடுமுற்றத்தில் கிடத்தப்பட்டுள்ளது. ‘ ஏன் உன் கண்கள் சிரிக்கவில்லை ?’ என்ற கேள்வியுடன் உறவினர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள். நானோ நீ திறந்து சென்ற மனக்கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டு துடித்துக்கொண்டிருக்கும் ஓர் சிவப்புநிற அட்டையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சாவீடு தொடங்கி...


